/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி--குன்னுார் பஸ்கள் குறைவு; காத்திருந்து பஸ்சில் நின்று கொண்டு பயணம் ஊட்டி--குன்னுார் பஸ்கள் குறைவு; காத்திருந்து பஸ்சில் நின்று கொண்டு பயணம்
ஊட்டி--குன்னுார் பஸ்கள் குறைவு; காத்திருந்து பஸ்சில் நின்று கொண்டு பயணம்
ஊட்டி--குன்னுார் பஸ்கள் குறைவு; காத்திருந்து பஸ்சில் நின்று கொண்டு பயணம்
ஊட்டி--குன்னுார் பஸ்கள் குறைவு; காத்திருந்து பஸ்சில் நின்று கொண்டு பயணம்
ADDED : செப் 21, 2025 10:16 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டம், 'குன்னுார் ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
குறிப்பாக, மாலை, 4:00 மணியில் இருந்து 6:00 மணி வரையில், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்நேரங்களில் 'எக்ஸ்பிரஸ்' பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். குறிப்பாக, எல்லநள்ளி பகுதியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர். இதேபோல, குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு காலை, 8:00 மணியில் இருந்து 9:00 மணி வரை லோக்கல் பஸ்கள் இல்லாததால், பிற பஸ்களில் கூட்ட நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர்.
எனவே, இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.