ADDED : ஜன 05, 2024 11:39 PM
ஊட்டி;ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தின், 40 வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அருளகம் மறைப்பணி நிலைய இயக்குனர் வின்சென்ட் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு குரு செல்வநாதன் சிறப்பு பிரார்த்தனை செய்தார். சிறப்பு கூட்டு திருப்பலியை வின்சென்ட் நிகழ்த்தினார். தினமும், மாலை, 5:30 மணிக்கு சிறப்பு நவநாள் நற்கருணை ஆராதனை திருப்பலி, மறையுரை நடக்கிறது. நாளை, 7ம் தேதி குழந்தை ஏசு திருத்தலத்தின், 40 வது ஆண்டு விழா சிறப்பிக்கப்படுகிறது.