/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்
ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்
ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்
ரேஷனில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது அதிகாரிகளுக்கு உத்தரவு...!மாற்றும் பணியில் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம்
ADDED : ஜூலை 10, 2024 12:28 AM
ஊட்டி;'பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் அளவுக்கு, ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் இருக்க கூடாது,' என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கொள்முதல் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர முகமைகள் மூலம் அந்தந்த தாலுகா குடோன்களில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, அரசின் மானியத்தின் மூலம் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
2.20 லட்சம் கார்டுதாரர்கள்
அதில், நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காவில் பகுதி நேரம், முழு நேரம்,' என, 412 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. 2.20 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கார்டுதாரர்கள் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருட்கள் வாணிக கழக குடோன்களிலிருந்து அந்தந்த பகுதியில் உள்ள குடோன்களுக்கு பெறப்பட்ட அரிசி, கடந்த சில மாதங்களாக தரமற்ற நிலையில் உள்ளதாக, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா அமைச்சர் உத்தரவு
இதை தொடர்ந்து, ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில், 5ம் தேதி பொது வினியோக திட்ட குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, 'ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகிப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்,' என, சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், 'குடோன்களில் உள்ள தரமற்ற அரிசியை திருப்பி அனுப்பி, தரமான அரிசி வாங்கி தாலுகா குடோன்களுக்கு மாற்றி கொடுக்க வேண்டும். இனி எக்காரணத்தை கொண்டும் தரமற்ற அரிசி வினியோகிக்க கூடாது,' என, அறிவுறுத்தினார். இதனால், தரமற்ற அரிசியை திரும்ப அனுப்பும் பணியில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன் கூறுகையில், ''அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை தரமாக தான் கொள்முதல் செய்து வருகிறோம். சில இடங்களில் மக்களின் புகாரையடுத்து, 'தரமற்ற அரிசியை மாற்றி, தரமான அரிசி வாங்கி வினியோகிக்க வேண்டும்,' என, அமைச்சர் உத்தரவிட்டதால், அதற்கான நடவடிக்கையை செய்து வருகிறோம்,'' என்றார்.