/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வடமாநில தொழிலாளி கொலை விவகாரம் ஒடிசாவில் பிடிபட்டவரிடம் விசாரணை வடமாநில தொழிலாளி கொலை விவகாரம் ஒடிசாவில் பிடிபட்டவரிடம் விசாரணை
வடமாநில தொழிலாளி கொலை விவகாரம் ஒடிசாவில் பிடிபட்டவரிடம் விசாரணை
வடமாநில தொழிலாளி கொலை விவகாரம் ஒடிசாவில் பிடிபட்டவரிடம் விசாரணை
வடமாநில தொழிலாளி கொலை விவகாரம் ஒடிசாவில் பிடிபட்டவரிடம் விசாரணை
ADDED : மார் 21, 2025 02:52 AM
குன்னுார்: குன்னுாரில் வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தலைமறைவான நபர் ஒடிசாவில் பிடிபட்டார்.
குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் அருகே, பழைய வீட்டில், வட மாநில தொழிலாளர்கள் நரேந்திர குஷிலியா,42. விரேந்தர்,36 ஆகிய இருவர் தங்கி, சுலைமான் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் கடந்த, 17ல் பணிக்கு வராத நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினர் ஆட்களை அனுப்பி பார்த்த போது, நரேந்திர குஷிலியா கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.
எஸ்டேட் நிர்வாகம் அளித்த புகாரில், போலீசார் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., ரவி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் மற்றும் குற்றப் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான நபரை தேடினர்.
இதில், தலைமறைவான வீரேந்தரின் மொபைல் எண், கோவை ரயில் நிலையத்தில் 'சுவிட்ச்' ஆகியது தெரிய வந்தது. 'அவர் ஒடிசா சென்றிருக்கலாம்,' என, தெரிய வந்ததால், அந்த மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரை பிடித்த ஒடிசா போலீசார், அங்கு சென்ற தனிப்படை போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். குன்னுார் அழைந்த வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.