/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொடரும் மழையில் உருவாகும் புதிய நீரூற்றுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி தொடரும் மழையில் உருவாகும் புதிய நீரூற்றுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடரும் மழையில் உருவாகும் புதிய நீரூற்றுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடரும் மழையில் உருவாகும் புதிய நீரூற்றுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
தொடரும் மழையில் உருவாகும் புதிய நீரூற்றுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2025 09:24 PM

கூடலுார்; கூடலுாரில் தொடரும் பருவ மழையால், புதிய நீருற்றுகள் உருவாகி வருவதால், விவசாயிகளை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.
கூடலுார் பகுதியில், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை, வழக்கத்துக்கு மாறாக, மே மாதம் துவங்கி விட்டது. தொடரும், மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து வருவதுடன், குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையோரங்களில் மரங்கள் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளாட்சி துறையினர் அவற்றை அகற்றி போக்குவரத்து சீரமைத்து வருகின்றனர். மரங்கள், மரக்கிளைகள் விழுந்து சேதமடையும் மின்கம்பிகள், மின்கம்பங்களை மின்துறையினர் சீரமைத்து மின் சப்ளை வழங்கி வருகின்றனர்.
தொடரும் மழையில் நிலத்தடி நீர் உயர்ந்து வருவதுடன், புதிய நீரூற்றுகள் உருவாகி வருகிறது. ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உருவாகியுள்ள புதிய நீரூற்றுகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது
விவசாயிகள் கூறுகையில், 'நடப்பு ஆண்டு, தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாக துவங்கி பெய்து வருவதால், நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. புதிய நீரூற்றுகள் உருவாக்கி உள்ளது. குறித்த நேரத்தில் நெல் நடவு பணிகளை துவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றார்.