/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம்; சுற்றுலாப் பயணிகள் வியப்பு புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம்; சுற்றுலாப் பயணிகள் வியப்பு
புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம்; சுற்றுலாப் பயணிகள் வியப்பு
புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம்; சுற்றுலாப் பயணிகள் வியப்பு
புதுப்பொலிவுடன் அருங்காட்சியகம்; சுற்றுலாப் பயணிகள் வியப்பு
UPDATED : செப் 12, 2025 09:37 PM
ADDED : செப் 12, 2025 08:13 PM

கூடலுார், ; கூடலுார், ஜீன்பூல் தாவர மையத்தில் அமைத்துள்ள அருங்காட்சியகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
கூடலுார் பகுதியில் சுற்றுலா மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன் பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குள்ள, காட்சி கோபுரம், 'ஜிப்' லைன், ஆரல் மீனகம், ஆர்கிட் பசுமை குடில், பெரணி கண்ணாடி இல்லம், மின்மினிப்பூச்சி அறை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது, புது பொலிவுடன் அமைத்துள்ள மியூசியம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமையின் எலும் புகள், மான் கொம்புகள், பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுத்தை, உலர் தாவரங்கள், பார்மலின் திரவ நிரப்பிய பாட்டில்களில் வைக்கப்பட்டுள்ள பாம்புகள் உள்ளிட்ட சிறு உயிரினங்களின் உருவங்கள், தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட காய், பழம், வேர்கள் மற்றும் இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய, 120 பாறைகள் மற்றும் படிவ கற்கள் பெயருடன் வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'மியூசியத்தில் உள்ள வனவிலங்கு எலும்புகள், பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, பாட்டில்களில் வைக்கப்பட்டுள்ள சிறு வன உயிரினங்களின் உருவங்கள், தாவரங்களின் பாகங்கள் பார்ப்பது வியப்பாக உள்ளது,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'மேம்படுத்தப்பட்டுள்ள மியூசியம், சுற்றுலா பயணிகளுக்கு பார்த்து ரசிப்பதற்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மியூசியத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,' என்றனர்.