/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம் இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம்
இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம்
இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம்
இரண்டு பதிவு எண்களுடன் நகராட்சி டிராக்டர் இயக்கம்
ADDED : ஜூன் 05, 2025 11:06 PM

பந்தலுார், ; நெல்லியாளம் நகராட்சியில், குப்பைகள் அகற்றும் பணி, ஒப்பந்ததாரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக நகராட்சி மூலம் இரண்டு குப்பை லாரிகளும், ஒப்பந்ததாரர் மூலம் டிராக்டரும் இயக்கப்பட்டு குப்பைகள் எடுத்துச் செல்லப்படுகிறது. அதில், டிராக்டருக்கு பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட நிலையில், அது குறித்து படத்துடன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், 'பதிவு எண் எழுதப்பட்டு டிராக்டர் இயக்கப்படும் நிலையில், முன் பகுதியில் ஒரு பதிவெண்; பின் பகுதியில் ஒரு பதிவெண்,' என, இரண்டு பதிவு எண்களுடன் இயக்கப்பட்டு வருகிறது. இது போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.