/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுார் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்; பண்டைய தமிழ் கலாசார வடிவமைப்புகள் அசத்தல் குன்னுார் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்; பண்டைய தமிழ் கலாசார வடிவமைப்புகள் அசத்தல்
குன்னுார் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்; பண்டைய தமிழ் கலாசார வடிவமைப்புகள் அசத்தல்
குன்னுார் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்; பண்டைய தமிழ் கலாசார வடிவமைப்புகள் அசத்தல்
குன்னுார் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்; பண்டைய தமிழ் கலாசார வடிவமைப்புகள் அசத்தல்
ADDED : மே 30, 2025 11:29 PM

குன்னுார் : குன்னுார் காட்டேரி பூங்காவில் முதலாவது மலை பயிர்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாக்களின் நிறைவாக, குன்னுார் காட்டேரி பூங்காவில், மலை பயிர்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
சிறப்பம்சமாக தமிழர்களின் வாழ்வை பறைசாற்றும் கிராமபுற வாழ்வை வெளிப்படுத்தும் வகையில், பண்டைய தமிழ் பாரம்பரிய குடிசை உட்பட பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், தேயிலை, காபி, வெற்றிலை, முந்திரி, தென்னை, பனை, கோகோ, எண்ணெய்பனை, பாக்கு மற்றும் நுங்கு போன்றவைகளில், முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுகளான, நுங்கு வண்டி, சறுக்கு விளையாட்டு. ஏர் உழுதல் உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
நம் மாநில மரமான பனை மற்றும் மாநில விலங்கான வரையாடு வடிவமைப்புகள், பேரிச்சம் பழம், நுங்கு பனை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறைகளின் அரங்குகளில், பனை, முந்திரி உட்பட மலை பயிர் வகைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி பேசுகையில், ''பண்டைய பாரம்பரிய தமிழ் கலாசாரம் வெளிப்படுத்தும் வகையில், 4 டன் அளவிலான மலை பயிர்களில் வடிவமைப்புகள் உட்பட பல்வேறு பயிர் வகைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன,'' என்றார். காலையில், மழையின் தாக்கம் இருந்த போதும், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கென, 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வரும் ஜூன், 1ம் தேதி, நிறைவு நாளன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.