/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள்; விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள்; விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள்; விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள்; விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
நீலகிரியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள்; விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 09:17 PM
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார்.
கண்காணிப்பு அலுவலர் வினீத் பேசியதாவது:
மாநில அரசு பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுத் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேருவதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் விவரம், நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் குடியிருப்பு கட்டுமான பணிகளின் விவரம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய நிலை குறித்தும், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 'கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள்; குன்னுார் லாலி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை; ஊட்டி சேரிங்கிராசில் உள்ள முதல்வர் மருந்தக கடையில் மருந்துகளின் இருப்பு,' குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.