/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் மாயமான மாணவர்; 'டிரோன்' பயன்படுத்தி தேடும் பணி குன்னுாரில் மாயமான மாணவர்; 'டிரோன்' பயன்படுத்தி தேடும் பணி
குன்னுாரில் மாயமான மாணவர்; 'டிரோன்' பயன்படுத்தி தேடும் பணி
குன்னுாரில் மாயமான மாணவர்; 'டிரோன்' பயன்படுத்தி தேடும் பணி
குன்னுாரில் மாயமான மாணவர்; 'டிரோன்' பயன்படுத்தி தேடும் பணி
ADDED : செப் 18, 2025 09:01 PM
குன்னுார்; குன்னுார் பகுதியை சேர்ந்த அபுமுகமது என்பவரின், 19 வயது மகன், டைகர்ஹில் அருகே 'சூசைட் பாயின்ட்' பாறையில் நேற்று முன்தினம் நின்றவாறு, கோவையில் உள்ள அவரது நண்பருக்கு,'தற்கொலை செய்து கொள்கிறேன்,' என, மெசேஜ் அனுப்பி உள்ளார். அவரது நண்பர் உடனடியாக, மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து, பெற்றோர் அப்பர் குன்னுார் போலீசில் அன்று மாலை புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். 'சூசைட் பாயின்ட்' பாறை பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்கு மாணவரின் 'பேக்' மட்டும் கிடைத்துள்ளது.நள்ளிரவு, 12:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரை, டி.எஸ்.பி., ரவி, இன்ஸ்பெக்டர் அன்பரசு, தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தேடும் பணி நடந்தும் பயனில்லை.
நேற்று எஸ்.பி., நிஷா நேரில் ஆய்வு செய்தார். நக்சல் தடுப்பு பிரிவினர் உட்பட இரு குழுக்கள் அமைத்து தேடுதல் பணி நடந்தது. டிரோன் பயன்படுத்தியும் தேடப்பட்டது. எனினும் மாலை, 6:00 மணி வரை தேடியும் பயனில்லாததால், அனைவரும் திரும்பி சென்றனர். இன்றும் தேடுதல் பணி நடக்க உள்ளது.