/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இறைச்சி கடைகள் ஆய்வு; சுகாதாரமாக வைக்க உத்தரவு இறைச்சி கடைகள் ஆய்வு; சுகாதாரமாக வைக்க உத்தரவு
இறைச்சி கடைகள் ஆய்வு; சுகாதாரமாக வைக்க உத்தரவு
இறைச்சி கடைகள் ஆய்வு; சுகாதாரமாக வைக்க உத்தரவு
இறைச்சி கடைகள் ஆய்வு; சுகாதாரமாக வைக்க உத்தரவு
ADDED : மார் 24, 2025 10:48 PM
குன்னுார்; குன்னுார் மார்க்கெட் இறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு துாய்மையாக வைக்க உத்தரவிட்டனர்.
குன்னுார் மார்க்கெட் இறைச்சி கடைகளில், பழமையான பலகை, பெட்டிகள் வைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், நகராட்சி நகர் நல அலுவலர் சரவணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பராமரிப்பில்லாத பலகைகள், பெட்டிகள் மற்றும் கழிவுகளை அகற்றவும், முறையாக பராமரித்து சுகாதாரமாக வைக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து இவை அகற்றப்பட்டு, ஓட்டுப்பட்டறை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.