Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நிறம் மாறும் இலை கொண்ட 'மேப்பிள்' மரம்; சிம்ஸ் பூங்காவில் நாற்றுக்கள் தயார்

நிறம் மாறும் இலை கொண்ட 'மேப்பிள்' மரம்; சிம்ஸ் பூங்காவில் நாற்றுக்கள் தயார்

நிறம் மாறும் இலை கொண்ட 'மேப்பிள்' மரம்; சிம்ஸ் பூங்காவில் நாற்றுக்கள் தயார்

நிறம் மாறும் இலை கொண்ட 'மேப்பிள்' மரம்; சிம்ஸ் பூங்காவில் நாற்றுக்கள் தயார்

ADDED : மே 20, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
குன்னுார்; குன்னுார் சிம்ஸ்பூங்காவில், காலத்திற்கேற்ப இலைகளில், 5 நிறங்கள் மாறும், 'மேப்பிள்' மர நாற்றுக்கள், முதல் முறையாக நர்சரியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 'அரிக்கேரியா, ஓக், ருத்ராட்சை, மக்னோலியா, பைன், டர்பன்டைன், பெரணி,' உட்பட, 100 வகைகளில், 1,200 மரங்கள் உள்ளன.

அதில், நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த, 5 மேப்பிள் மரங்களில் இருந்து விழுந்த விதைகளில், தானாக உருவாகிய நாற்றுக்கள், தற்போது பூங்கா நர்சரியில் பராமரிக்கப்படுகிறது.

பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில், ''ஆசிய கண்டத்தை தாயகமாக கொண்ட, சில்வர், ஐப்பான், ரெட், சுகர், நிக்கோன், மஞ்சூரியன். ஆர்ன் பீம் என பல்வேறு மேப்பிள் மரங்கள் நம் நாட்டில் உள்ளன. ஊட்டியில், சிற்றின வகையில், 'ஆசர் நெகுண்டோ, ஒபனாந்தம்' என, இரு மேப்பிள் மரங்கள் உள்ளன. சிம்ஸ்பூங்காவில் உள்ள, 5 மேப்பிள் மரங்களிலிருந்து, விழுந்த விதைகள், தானாக முளைத்த, 100 நாற்றுகள் சேகரிக்கப்பட்டு, முதல் முறையாக, நர்சரியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 300 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கோடையில் பச்சை; இலையுதிர் காலத்திற்கு முன்பு மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன், சிவப்பு என நிறம் மாறி, இலையுதிர் காலங்களில் உதிரும்.

கனடா நாட்டின் தேசியகொடியில், இதன் இலை இடம்பெற்றுள்ளது. இமயமலையில், 'சிம்பிள் ஆப் பியூட்டி', என அழைக்கும் இந்த மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக, ஆதார எண்கள் எழுதி, பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us