/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மகா முனீஸ்வரர் ஆலய கரக உற்சவ திருவிழாமகா முனீஸ்வரர் ஆலய கரக உற்சவ திருவிழா
மகா முனீஸ்வரர் ஆலய கரக உற்சவ திருவிழா
மகா முனீஸ்வரர் ஆலய கரக உற்சவ திருவிழா
மகா முனீஸ்வரர் ஆலய கரக உற்சவ திருவிழா
ADDED : ஜன 28, 2024 11:45 PM
ஊட்டி;ஊட்டி ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில், 15வது ஆண்டு கரக உற்சவ திருவிழா சிறப்பாக நடந்தது.
விழாவை ஒட்டி, காலை 5:00 மணிக்கு, ஸ்ரீ கணபதி ஹோமம், மங்கல துர்கா ஹோமம், 7:00 மணிக்கு, ஸ்ரீ செல்வ விநாயகர், துர்க்கை அம்மன், மகா முனீஸ்வரர் மற்றும் நவகிரக நாயகர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கடந்த, 26 காலை, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜை, 9:00 மணிக்கு, கரக உற்சவ விழா துவங்கி, 11:00 மணிக்கு, அருள்மிகு ஸ்ரீ படி முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயனின் திருவீதி உலா நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயனை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணபுரம் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.