/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனம்; 'திராவிடோ கெக்கோ' என்ற புதிய பெயர் பதிவு குன்னுாரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனம்; 'திராவிடோ கெக்கோ' என்ற புதிய பெயர் பதிவு
குன்னுாரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனம்; 'திராவிடோ கெக்கோ' என்ற புதிய பெயர் பதிவு
குன்னுாரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனம்; 'திராவிடோ கெக்கோ' என்ற புதிய பெயர் பதிவு
குன்னுாரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனம்; 'திராவிடோ கெக்கோ' என்ற புதிய பெயர் பதிவு
ADDED : ஜூன் 24, 2025 10:00 PM

குன்னுார்; குன்னூரில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லி இனத்துக்கு, 'திராவிடோ கெக்கோ' என புதிய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் ஸ்டான்லி பார்க் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அபினேஷ் அன்பழகன் தலைமையில், நவீன், ஸ்ரீகாந்தன், பாபு, கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், கண்டுபிடித்த பல்லி இனத்திற்கு 'திராவிடோ கெக்கோ' என, புதிய பெயரிட்டு, இதன் ஆய்வறிக்கை நேற்று முன்தினம் நியூசிலாந்தில் வெளியாகும் 'பயோனிமினா' இதழில் வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்தஆசிரியர் அபினேஷ் அன்பழகன் கூறுகையில், ''உலகில் வேறு எங்கும் இல்லாத பல்லி இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. அதில், பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதில், இந்த வகையை சார்ந்த, 8 பல்லிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது. ஆனால், பெயர் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது, குன்னுாரில், ஒன்பதாவதாக கண்டறியப்பட்ட இதே பல்லி இனத்துக்கு, 'திராவிடோ கெக்கோ' என, புதிய பெயர் பதிவு செய்யப்பட்டது. இவை வனப்பகுதி அருகே உள்ள இடம், பேரி தோட்டம், பாழடைந்த கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வாழக்கூடியது.
இரவில், 7:00 மணிக்கு மேல் உணவு தேடி வெளியில் வரும் இவை, எறும்புகளை அதிகம் உட்கொள்கிறது. அதிகம் இருந்த இந்த பல்லியினம் காடுகள் அழிப்பு, தேயிலை தோட்டமாக மாற்றம் ஆகியவை காரணமாக குறைந்து வருகிறது,'' என்றார்.