/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறைசிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
ADDED : ஜன 10, 2024 11:49 PM

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி கோட்டத்துறையை சேர்ந்தவர் கணேசன், 40, இவர், கடந்த, 2018 மே மாதம் 26ம் தேதி, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். ஷோளயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.
இவ்வழக்கு நேற்று பாலக்காடு விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், அபராத தொகையாக 1.5 லட்சம் ரூபாயும் விதித்து நீதிபதி சஞ்சு தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சோபனா ஆஜரானார்.