/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய் வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
வீட்டுக்குள் வந்த சிறுத்தை; விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்
ADDED : ஜூன் 06, 2025 09:10 AM

பந்தலுார்; பந்தலுார் அருகே வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய் பார்த்து உள்ளூர் மக்கள் வியப்படைந்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு பனஞ்சிரா நேதாஜி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன்பக்க வாசலில் நின்றிருந்த நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றுள்ளது. அப்போது, தொடர்ந்து குரைத்த நாயை பிடிக்க முயன்றபோது, நாய் சிறுத்தையிடமிருந்து தப்பி கேட்டிற்கு வெளியே சென்றது.
வெளியே நின்றிருந்த நாயை சிறுத்தை மீண்டும் பிடிக்க முயன்றபோது, நேரடியாக நின்று குரைத்து சிறுத்தையை எதிர்த்தது.
அப்போது, சிறுத்தை திடீரென கேட்டிற்கு வெளியே குதித்து ஓடியுள்ளது. அதனையடுத்து, நாய் வீட்டு வாசலுக்கு வந்து நின்று சிறுத்தையை நோட்டமிட்டுள்ளது. இந்த காட்சி வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மக்கள் வியப்படைந்தனர்.
வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில்,''இப்பகுதிகளில் வன விலங்கு நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனது வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு சிறுத்தை வரும் போது, நாய் குரைத்தது. 'சிசிடிவி'யில் பார்த்த போது சிறுத்தை உள்ளே வந்தது. அதனை பார்த்து அச்சப்படாமல், வீட்டை வீட்டு ஓடி விடாமல் நின்று குரைத்து சிறுத்தையை விரட்டி எங்களை காப்பாற்றியது,'' என்றார்.