/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறை விசாரணை சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
சிறுத்தை குட்டி உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
ADDED : மார் 16, 2025 11:39 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில், சிறுத்தை குட்டி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தனியார் தேயிலை தோட்ட குடிநீர் தொட்டி அருகே, சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, வனவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த சிறுத்தை குட்டி உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அதில், உயிரிழந்தது, 8 மாத பெண் சிறுத்தை குட்டி என்பதும், நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.