/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சட்ட பேரவை ஏடுகள் குழுவினர் மசினகுடி, முதுமலையில் ஆய்வு சட்ட பேரவை ஏடுகள் குழுவினர் மசினகுடி, முதுமலையில் ஆய்வு
சட்ட பேரவை ஏடுகள் குழுவினர் மசினகுடி, முதுமலையில் ஆய்வு
சட்ட பேரவை ஏடுகள் குழுவினர் மசினகுடி, முதுமலையில் ஆய்வு
சட்ட பேரவை ஏடுகள் குழுவினர் மசினகுடி, முதுமலையில் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 09:48 PM

கூடலுார் ; தமிழ்நாடு சட்டப்பேரவை ஏடுகள் குழு தலைவர் லட்சுமணன் தலைமையில் உறுப்பினர்கள் தேவராஜ், பாண்டியன், விஸ்வநாதன் ஆகியோர், ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இவர்கள், மசினகுடியில் உள்ள சிங்காரா மற்றும் மாயாறு நீர் மின் உற்பத்தி நிலையங்களில் ஆய்வு செய்து, மின் உற்பத்தி பணிகள் குறித்து கேட்டிருந்தனர்.
ஆய்வின் போது குந்தா நீர்மின்நிலையம் உற்பத்தி மேற்பார்வை பொறியாளர் பிரேம்குமார், நீலகிரி மேற்பார்வை பொறியாளர் சேகர், துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் சுரேஷ், கூடலுார் கோட்ட செயற்பொறியாளர் (பொ) முத்துகுமார் உடனிருந்தனர்.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். வளர்ப்பு யானைகள் பாமா, காமாட்சிக்கு கரும்பு வழங்கினர்.
ஆய்வின் போது, முதுமலை துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர் மேகலா, கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள், பாகன்கள், உதவியாளர்கள் உடனிருந்தனர்.