Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

ADDED : மார் 16, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
ஊட்டி:ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது.

ஊட்டியில், 95 ஆண்டுகள் பழமையான எல்க்ஹில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், மாநில அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தகோவிலில், மலேசியா முருகன் கோவிலில் உள்ளதை போன்ற, 44 அடி உயர முருகன் சிலை உள்ளது. கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவுபடுத்தப்பட்டது.

மஹா கும்பாபிஷேக விழாவை ஒட்டி துாய நீராக்கல், கணபதி வேள்வி, லக்ஷ்மி வேள்வி, நவக்கோள் நிறையர் ஹுதி, பேரொளி வழிபாடு நடந்தது. பின், முதற்கால யாகவேள்வி, மூல மந்திர வேள்வி நிறையா ஹுதி பேரொளி வெளிப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

கும்பாபிேஷக விழா


காலை, 5:00 மணி முதல் துாய நீராக்கல், நான்காம் காலயாக வேள்வி நிகழ்ச்சி நடந்தது. மேலும், மூல திருமேனிக்கு நாடி மூலம் இறை ஆற்றல் செலுத்துதல், மலர் அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தது.புனித நீர் குடங்கள் கோவில் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. 9:45 மணிமுதல் 10:45 மணிவரை பால தண்டாயுதபாணி சுவாமி விமானம் மற்றும் பரிகார விமானங்கள் பெருஞ்சாந்தி மஹா கும்பாபிஷேகம், குருக்கள் விஜயஆனந்த் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

பால தண்டாயுதபாணி சுவாமி பெருந்திரு மஞ்சனம் (மகா அபிஷேகம்) திருமேனி அலங்கரித்தல், பதின் மங்கல காட்சிகள், பேரொளி வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us