/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூடலுார் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலைகூடலுார் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
கூடலுார் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
கூடலுார் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
கூடலுார் பால் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
ADDED : ஜன 30, 2024 11:08 PM
கூடலுார்:கூடலுார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடலுார் ஹெல்த்கேம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 59. இவர் கூடலுார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடலை, மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், எஸ்.ஐ., கபில்தேவ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'நிர்வாக கணக்கு தொடர்பான தணிக்கையின் போது, நிலுவை தொகை தொடர்பாக கேட்டதாகவும்; அதனால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து இருக்கலாம்,' என்றனர்.