/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுார்-கீழ்நாடுகாணி சாலை; நீச்சல் அடிக்கலாம் கூடலுார்-கீழ்நாடுகாணி சாலை; நீச்சல் அடிக்கலாம்
கூடலுார்-கீழ்நாடுகாணி சாலை; நீச்சல் அடிக்கலாம்
கூடலுார்-கீழ்நாடுகாணி சாலை; நீச்சல் அடிக்கலாம்
கூடலுார்-கீழ்நாடுகாணி சாலை; நீச்சல் அடிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 06:20 AM

கூடலுார் : கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கேரளா செல்லும் கோழிக்கோடு சாலை தமிழக -- கேரளா - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கேரளாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களுக்கு வருவாய் துறையினர் நாடுகாணியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
கூடலுாரில் இருந்து கீழ்நாடுகாணி வரை, 17 கி.மீ., தூரமுள்ள சாலையில், செம்பாலா - நாடுகாணி இடைப்பட்ட சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து செம்பாலா வரையும், 2 கி.மீ., நாடுகாணியிலிருந்து மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்கு குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விழுந்து காயம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில்,'பிற மாநில சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு வர முக்கிய வழித்தடமாகும். நுழைவு கட்டணம் வசூல் வாயிலாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. விரைவில் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.