/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுார் மன்ற கூட்டம் இரண்டாம் முறையாக ரத்து கூடலுார் மன்ற கூட்டம் இரண்டாம் முறையாக ரத்து
கூடலுார் மன்ற கூட்டம் இரண்டாம் முறையாக ரத்து
கூடலுார் மன்ற கூட்டம் இரண்டாம் முறையாக ரத்து
கூடலுார் மன்ற கூட்டம் இரண்டாம் முறையாக ரத்து
ADDED : ஜூன் 06, 2025 10:31 PM
கூடலுார்; 'கூடலுார் மன்ற கூட்டத்தில் கமிஷனர் பங்கேற்கவில்லை,' என்ற காரணத்தால், மன்ற கூட்டத்தை இரண்டாம் முறையாக கவுன்சிலர்கள் ரத்து செய்தனர்.
கூடலுார் நகராட்சியில் கடந்த மாத கூட்டம், 30 தேதி நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் பங்கேற்கவில்லை, இதனால், கூட்டம் ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து, 2-வது முறையாக, நகர மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது.
கவுன்சிலர் லீலா, 'தன் வார்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தலைவரின் சமாதானத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், கூட்டத்தில், கமிஷனர் பங்கேற்கவில்லை. 'கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, கோரிக்கையை மனுவாக எழுதி கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு தலைவரிடம் வழங்கினர். தொடர்ந்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டு கவுன்சிலர்கள் வெளியேறினர்.
கவுன்சிலர்கள் கூறுகையில், 'கூடலுார் வளர்ச்சி பணிகளுக்கான உத்தரவை உடனடியாக வழங்கி பணிகள் துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.