/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோடநாடு கொலை வழக்கு அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு கோடநாடு கொலை வழக்கு அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை வழக்கு அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை வழக்கு அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை வழக்கு அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : செப் 19, 2025 08:31 PM
ஊட்டி; கோத்தகிரி கோடநாடு கொலை கொள்ளை வழக்கை, அக்.,10ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோத்தகிரி கோடநாடு பங்களாவில், 2017ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. குற்றம் தொடர்பாக, சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சமி, தீபு மற்றும் ஜித்தின்ஜாய் உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் இதுவரை, 316 பேரிடம் மறு விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையில், மாவட்ட நீதிபதி வேறு பணியில் இருந்ததால், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜர் ஆயினர். அப்போது, இவ்வழக்கு குறித்து கேட்டறிந்த நீதிபதி, வழக்கை அக். 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.