Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த அறங்காவலர்கள்

காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த அறங்காவலர்கள்

காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த அறங்காவலர்கள்

காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த அறங்காவலர்கள்

ADDED : ஜன 10, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில், அறங்காவலர் குழு தலைவராக தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார். ஆனால் அந்த பதவியேற்பு விழாவை அறங்காவலர்கள் புறக்கணித்தனர்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் ஐந்து பேர் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

கோவை சாய்பாபா காலனி எம்.எம்.ராமசாமி, காரமடை தேவ் ஆனந்த், மத்வராயபுரம் கார்த்திகேயன், கவுண்டம்பாளையம் சுஜாதா, காரமடை மேடூர் குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரில் ஒருவரை, அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்க 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறாத போது, அதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தலைவரை தேர்ந்தெடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன் படி காரமடையை சேர்ந்த தேவ் ஆனந்தை தலைவராக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

நேற்று, காரமடை அரங்கநாதர் கோவில் அலுவலகத்தில் தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார். அவருக்கு கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உடன் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் காரமடை நகராட்சி தலைவர் உஷா, அட்மா சங்க தலைவர் சுரேந்திரன், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புறக்கணிப்பு


--- ஆனால், இந்த விழாவில் கோவில் அறங்காவலர்கள், எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, குணசேகரன் ஆகிய 4 பேர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர்.

இதுகுறித்து அறங்காவலர் எம்.எம்.ராமசாமி கூறுகையில், அறங்காவலர் குழு தலைவர், பதவியேற்பு விழாவிற்கு அறங்காவலர்களை முறையாக அழைக்கவில்லை. ஆகையால் 4 அறங்காவலர்களும் புறக்கணிப்பு செய்தோம். கோவில் நிர்வாகம் சார்பில் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது என மட்டுமே தகவல் வந்தது, என்றார்.

இதுகுறித்து காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில்,கோவில் நிர்வாகம் சார்பில் அலுவலக ரீதியான அழைப்பு அறங்காவலர்களுக்கு கொடுக்கப்பட்டது, என்றார்.

காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர்களாக ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு மற்ற நான்கு பேருமே வராதது கோவில் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us