/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கேரள மாநில எல்லையில் தொடரும் விலங்கு பிரச்னை: தீர்வு காண கோரி வயநாடு பகுதியில் 13ல் பந்த் நடத்த முடிவுகேரள மாநில எல்லையில் தொடரும் விலங்கு பிரச்னை: தீர்வு காண கோரி வயநாடு பகுதியில் 13ல் பந்த் நடத்த முடிவு
கேரள மாநில எல்லையில் தொடரும் விலங்கு பிரச்னை: தீர்வு காண கோரி வயநாடு பகுதியில் 13ல் பந்த் நடத்த முடிவு
கேரள மாநில எல்லையில் தொடரும் விலங்கு பிரச்னை: தீர்வு காண கோரி வயநாடு பகுதியில் 13ல் பந்த் நடத்த முடிவு
கேரள மாநில எல்லையில் தொடரும் விலங்கு பிரச்னை: தீர்வு காண கோரி வயநாடு பகுதியில் 13ல் பந்த் நடத்த முடிவு
ADDED : பிப் 12, 2024 01:23 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே உள்ள, கேரளா மாநிலம் மானந்தவாடி, படமளா என்ற கிராமத்துக்கு வந்த காட்டு யானை ஒருவரை கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஹாசன் பகுதியில், தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு, 'ரேடியோ காலர்' பொருத்தி நாகர்ஹோலா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளது.
இந்த யானை நேற்று முன்தினம் காலை கேரளா மாநிலம் மானந்தவாடி, படமளா என்ற கிராம பகுதிக்கு வந்துள்ளது. யானை வருவதை தெரியாமல் 'வாக்கிங்' சென்றவர்கள் யானையை பார்த்து ஓட்டம் பிடித்துள்ளனர். அதில், அஜீஸ் என்பவர், யானையிடமிருந்து உயிர்தப்பி வீட்டிற்கு ஓடி உள்ளார்.
அவரை விடாமல் துரத்திய யானை, படிக்கட்டுகள் வழியாக ஏறி, வீட்டு வாசலுக்கு சென்றுள்ளது. வீட்டு வாசல் படியில் தவறி விழுந்த அஜீசை தாக்கி உள்ளது. அதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள், இறந்தவரின் உடலுடன் கேரளா -மைசூரூ சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வயநாடு கலெக்டர் ரேணுராஜ், எஸ்.பி., நாராயணன் ஆகியோரை முற்றுகையிட்ட போராட்ட குழுவினர், 'யானையை சுட்டு கொல்ல வேண்டும்; இறந்தவர் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்,' என, தெரிவித்தனர்.
தொடர்ந்து, நடந்த பேச்சு வார்த்தையில், 'முதல்கட்டமாக உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்; மீதம் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி தீர்வு காணப்படும்; யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து கர்நாடக மாநில யானைகள் முகாமில் ஒப்படைக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.
இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், யானை கர்நாடக எல்லையான பாவலி என்ற இடத்தில் முகாமிட்டதால், கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், 13-ம் தேதி வயநாடு பகுதியில், வனவிலங்கு தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.