Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாறு கழுகுகளை பாதுகாப்பது அவசியம்; ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

பாறு கழுகுகளை பாதுகாப்பது அவசியம்; ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

பாறு கழுகுகளை பாதுகாப்பது அவசியம்; ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

பாறு கழுகுகளை பாதுகாப்பது அவசியம்; ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

ADDED : செப் 07, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
ஊட்டி; ஊட்டியில் உலக பாறுகழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை பூங்கோதை தலைமை வகித்தார். அதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது எண்ணத்தில் தோன்றிய பாறுக்கழுகுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, ஓவியம் வாயிலாக எடுத்துரைத்தனர். இந்த ஓவியங்கள், எவ்வித ரசாயனம் கலக்காமல், முற்றிலும் இயற்கையாக வரையப்பட்டன.

அதில், பழங்குடியினர் மாணவர்களின் முன்னோர், பயன்படுத்திய வழிமுறையில், அடுப்புக்கரி, மஞ்சள், தாவர இலை, பூ, காப்பித்துாள் மற்றும் களிமண் போன்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களின் மூலம் ஓவியமாக வரையப்பட்டது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, ஊட்டி ரோஜா பூங்காவில், சர்வதேச பாறு கழுகுகள் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, அருளக அமைப்பினர் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு, கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிகழ்வை, 'ஈகோ வாய்ஸ் டிரஸ்ட்' மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஒருங்கிணைந்து நடத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us