/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இருளில் பழங்குடி கிராமம் தெருவிளக்கு அமைப்பது அவசியம் இருளில் பழங்குடி கிராமம் தெருவிளக்கு அமைப்பது அவசியம்
இருளில் பழங்குடி கிராமம் தெருவிளக்கு அமைப்பது அவசியம்
இருளில் பழங்குடி கிராமம் தெருவிளக்கு அமைப்பது அவசியம்
இருளில் பழங்குடி கிராமம் தெருவிளக்கு அமைப்பது அவசியம்
ADDED : ஜூன் 26, 2025 09:22 PM
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில், பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு, சின்ன குரும்பாடி கிராமத்தில், குரும்பா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு மழையின் காரணமாக மின்கம்பங்கள் விழுந்தன. கம்பங்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.
இது தொடர்பாக, 8வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சாந்தி கூறுகையில்,''இங்கு தெருவிளக்குகள் அமைக்க பல முறை பர்லியார் ஊராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் பள்ளி முடித்து பஸ்களில் இரவில் வந்தடையும், மாணவ, மாணவிகள் யானை நடமாட்ட அச்சத்தில் பயத்துடன் நடந்து வருகின்றனர். எனவே, பர்லியார் ஊராட்சி மற்றும் மின்வாரியம், தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.