/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் சேர அழைப்பு
ADDED : ஜூன் 06, 2025 10:00 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், கைம் பெண்கள் , ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
கைம் பெண்கள் ,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் , நலிவுற்ற பெண்கள் , ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு, கல்வி , சுகாதாரம் , வேலைவாய்ப்புக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சி வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன், சிறப்பான முறையில் வாழ்வதற்காக தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அரசின் பல்வேறு திட்டங்கள் கீழ் பயனடையலாம். இதற்கான முகாம், 9ம் தேதி கோத்தகிரியில் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.