/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காரமடை வனப்பகுதியில் தீவிர சோதனை... மாவோயிஸ்ட் நடமாட்டம்?இறையாண்மைக்கு எதிராக வாசகம் எதிரொலிகாரமடை வனப்பகுதியில் தீவிர சோதனை... மாவோயிஸ்ட் நடமாட்டம்?இறையாண்மைக்கு எதிராக வாசகம் எதிரொலி
காரமடை வனப்பகுதியில் தீவிர சோதனை... மாவோயிஸ்ட் நடமாட்டம்?இறையாண்மைக்கு எதிராக வாசகம் எதிரொலி
காரமடை வனப்பகுதியில் தீவிர சோதனை... மாவோயிஸ்ட் நடமாட்டம்?இறையாண்மைக்கு எதிராக வாசகம் எதிரொலி
காரமடை வனப்பகுதியில் தீவிர சோதனை... மாவோயிஸ்ட் நடமாட்டம்?இறையாண்மைக்கு எதிராக வாசகம் எதிரொலி
ADDED : ஜூலை 03, 2024 02:33 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மலை பாதை தடுப்பு சுவரில் இந்திய இறையாண்மைக்கு எதிராக 'இந்தியா ஒழிக' என எழுதியிருந்தது. இச்சம்பவத்தின் எதிரொலியாக கேரளா மாநில எல்லையை ஒட்டியுள்ள காரமடை வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிட்கள் நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் முதல் வளைவு அருகே மலை பாதை தடுப்பு சுவரில் நேற்று முன் தினம் இந்தியா இறையாண்மைக்கு எதிராக 'இந்தியா ஒழிக' என எழுதப்பட்டிருந்தது.
மேலும் பிரிவினையை துாண்டும் வகையில், 'இந்தியா நீட்டை திணிக்கிறது, தமிழ்நாடு இந்தியாவை வீட்டு வெளியேற வேண்டும்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி, கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனரா, நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலன்புதுார், செங்குட்டை, குட்டைபுதுார், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் போலீசார் வனத்துறையினருடன் இணைந்து மலை கிராமங்களுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் மாவோயிஸ்ட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இல்லை. மாவோயிஸ்ட்கள் உள்நுழையாமல் இருக்க, கேரளா மாநில எல்லைப்பகுதிகளான ஆனைக்கட்டி, மாங்கரை, முள்ளி, கோப்பனாரி, நடுபுணி, வடக்கு காடு, ஜமீன்காளியபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனுார், வளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம், செம்மனபதி, மழுக்குப்பாறை சோதனை சாவடிகளில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்கின்றனர்,'' என்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''கோத்தகிரி சாலையில் ஸ்பிரே வாயிலாக எழுதப்பட்டுள்ளது. யாராவது விளம்பரம் தேட கூட எழுதியிருக்கலாம். எனினும் மாவட்ட வனப்பகுதிகள் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து கூட்டு தணிக்கை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.