/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மசினகுடியில் விரைவில் சூழல் சுற்றுலா; வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்மசினகுடியில் விரைவில் சூழல் சுற்றுலா; வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்
மசினகுடியில் விரைவில் சூழல் சுற்றுலா; வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்
மசினகுடியில் விரைவில் சூழல் சுற்றுலா; வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்
மசினகுடியில் விரைவில் சூழல் சுற்றுலா; வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் தகவல்
ADDED : பிப் 23, 2024 11:30 PM

கூடலுார்;முதுமலை, மசினகுடி ஊராட்சி கிராம சபை கூட்டம், ஜன., 26ல் மாயார் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில், மசினகுடி வனகோட்ட துணை இயக்குனர் கூட்டத்தில் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்த மக்கள், கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
மீண்டும், மாலை மசினகுடி ஊராட்சி அலுவலகத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், 'மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர், பங்கேற்கும் கூட்டத்தை மசினகுடியில்நடத்துவது,' என, தெரிவித்தனர்.
அதன்படி, மசினகுடி சிங்கார வனச்சரகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஊட்டி ஆர்.டி.ஓ.,மகாராஜ் தலைமை வகித்தார்.
மக்கள் கூறுகையில், 'வனவிலங்குகளிடமிருந்து, விவசாய பயிர்கள் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்; வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தில், மக்கள் பாதிக்காத வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
சுற்றுலாவை சார்ந்துள்ள மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீண்டும் சூழல் சுற்றுலா கொண்டு வர வேண்டும். அதுவரை புது போக்குவரத்து சாலையில், சுற்றுலா வாகனங்கள் சென்று வரும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்; மக்கள் வசிப்பிடங்களில் வளர்ச்சிப் பணிகளை வனத்துறை தடுக்க கூடாது,' உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'சூழல் சுற்றுலா விரைவில் துவங்கபடும். பிற கோரிக்கைகள் குறித்து தீர்வு காண அரசுக்கு பரிந்துரைக்கப்படும்,' என்றனர். கூட்டத்தில், முதுமலை துணை இயக்குனர் அருண்குமார், தாசில்தார் சரவணன், வனச்சரகர்கள் பாலாஜி, ஜான் பீட்டர், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.