/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கெத்தை அணையில் அதிகரிக்கும் சகதி இரு மின் நிலைய உற்பத்தியில் சிக்கல் கெத்தை அணையில் அதிகரிக்கும் சகதி இரு மின் நிலைய உற்பத்தியில் சிக்கல்
கெத்தை அணையில் அதிகரிக்கும் சகதி இரு மின் நிலைய உற்பத்தியில் சிக்கல்
கெத்தை அணையில் அதிகரிக்கும் சகதி இரு மின் நிலைய உற்பத்தியில் சிக்கல்
கெத்தை அணையில் அதிகரிக்கும் சகதி இரு மின் நிலைய உற்பத்தியில் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2025 10:12 PM
ஊட்டி, ; கெத்தை உட்பட சில அணைகளில் அதிகரித்த சகதியால் ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டு மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா அணை, 89 அடி கொண்டதாகும். குந்தா அணை தூர்வாரி பல ஆண்டுகள் ஆனதால் அதிக அளவில் சகதி நிறைந்துள்ளது. சிறிய மழைக்கு அணை நிரம்பி விடும். சமீபத்தில்பெய்த மழைக்கு மேலும் சகதி அதிகரித்து முழு கொள்ளளவு எட்டி விட்டது.
குந்தா அணைகளில் இருந்து ராட்சத குழாய் மூலம் கெத்தை மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சகதி கலந்த தண்ணீரால் அடிக்கடி மின் உற்பத்தி தடை படுகிறது.
கெத்தை அணையிலும், 156 அடியில் பாதி அளவுக்கு சகதி நிறைந்ததால் தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. இங்கிருந்து ராட்சத குழாயில் பரளி மின் நிலையத்திற்கும் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட இரு மின் நிலையங்களில், 355 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழையிலும் இதே நிலை நீடிப்பதால் எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.