/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்புவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : பிப் 05, 2024 09:39 PM

கூடலுார்;முதுமலை புலிகள் காப்பகத்திற்கு, நம் நாட்டின் பல்வேறு பகுதிகள்; வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை வாகனத்தில் காலை, மாலை நேரங்களில் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.
பொது வாகனத்தில் சவாரி செய்யும், நம் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக, 340 ரூபாய்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, 2500 ரூபாய் வசூல் செய்கின்றனர். 'ஜிப்சி மற்றும் 'கேமபரில்' சென்று வர கட்டணமாக, 4,200 ரூபாய்; இந்திய சுற்றுலா பயணிக்கு தலா, 130 ரூபாய்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தலா, 400 ரூபாய் கூடுதலாக நுழைவு கட்டணம் வசூல் செய்கின்றனர்.
தற்போது, முதுமலைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இவர்கள் வாகன சவாரி மூலம் வனப்பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகளை ஆர்வத்துடன் படம் எடுத்து செல்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதை, மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகள் மாயாறு ஆற்றில் குளிப்பதையும் ஆர்வத்தோடு ரசித்து செல்கின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மூலம், முதுமலை வனத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வறட்சியிலும், வனப் பகுதிக்குள் சென்று வர ஆர்வம் காட்டி வருகின்றனர்,' என்றனர்.