/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல் விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
விவசாய நிதியுதவி திட்டம் பெற அடையாள எண் பதிவு அவசியம்; விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
மொபைல்போன் வாயிலாக அடையாள அட்டை
விவசாயிகள் தங்களின் பட்டா, ஆதார் அட்டை மற்றும் மொபைல்போன் வாயிலாக அடையாள அட்டை எண் பெற பதிவு செய்து கொள்ளலாம். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற இயலும். பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் வாயிலாக பயன் பெற்று வரும் விவசாயிகள் (இன்று) 30-ம் தேதிக்குள் கட்டாயமாக தங்களது நில உடமை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
51 ஆயிரம் பயனாளிகள் பதிவு
தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரியில் மொத்தம், 82,495 விவசாயிகள் உள்ளனர். பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ , 51,105 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். அதில், விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், பிரதமர் நிதி உதவி தொகை கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.