Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

ADDED : மே 19, 2025 08:48 PM


Google News
ஊட்டி; நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தாவரவியல் பூங்காவில் அரங்கு அமைத்து, இலவச சட்ட உதவிகள் பெறுவது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், 'தகுதியுள்ள நபர்களுக்கு இலவச மற்றும் தகுந்த சட்ட பணிகள் வழங்குதல்; தகராறுகளை இணக்கமாக சமரசம் செய்ய மக்கள் நீதிமன்றம் அமைத்தல்; சமுதாயத்தில் நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகள்,' குறித்த சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடை நிலை மற்றும் வசதியற்ற பிரிவினர்களுக்கு நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்கும் பொருட்டு அவர்களும் இணைந்த சட்ட முறையை ஏற்படுத்தி வருதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் உள்ள பணியாளர்கள், இலவச சட்டம் பெறுதல் குறித்தும் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us