மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணிமனு
மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணிமனு
மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணிமனு
ADDED : ஜன 10, 2024 10:41 PM
ஊட்டி : இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
நீலகிரி மாவட்டத்தில், வீடு என்றுஅனுமதி பெற்று, விதிகளை மீறி கிறிஸ்துவ ஜெபக்கூட கட்டடங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த மாதம், 31ம் தேதி, நள்ளிரவு, ஊட்டியில் அரசின் விதிகளை மீறி செயல்படும் ஜெப கூட்டத்தில் பங்கேற்ற சிலர், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் இருவரை கடுமையாக தாக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, பல்வேறு இடங்களில் விதிமீறி செயல்படும் ஜெபக்கூடங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, வேலுச்சாமி கூறியுள்ளார்.