/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ செம்மனாரை பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி செம்மனாரை பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி
செம்மனாரை பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி
செம்மனாரை பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி
செம்மனாரை பழங்குடியினர் பள்ளி குழந்தைகளுக்கு உதவி
ADDED : ஜூன் 24, 2025 09:53 PM
கோத்தகிரி; மஞ்சூர் அருகே சாம்ராஜ் பள்ளி முன்னாள் மாணவர்கள் நல சங்கத்தினர், வசதிகள் குறைவான கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கி, சேவை செய்யப்பட்டு வருகிறது.
கோத்தகிரி செம்மனாரை பழங்குடியினர் பள்ளிக்கு தேவையான உதவி பொருட்கள் மற்றும் பள்ளி பயன்பாட்டிற்காக, பிரிண்டர் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு மதியம் உணவு பரிமாறப்பட்டது. சங்க தலைமை பொறுப்பாளர்கள் மணி, அழகேசன், அன்பரசு, ராஜேஷ், தீபு ஆகியோர் கல்வி குறித்து பேசினர். சுகந்தி என்ற மலைவாழ் பெண்ணுக்கு, சங்க பொருளாளர் டானியல், உதவித்தொகை வழங்கினார். நிர்வாகி ரேணுகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை, செயலாளர் செல்வி செய்திருந்தார். ஆசிரியர் வெள்ளையம்மாள் நன்றி கூறினார்.