/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/'பீக்' ஹவர்சில் ஜெகதளா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் 'தொல்லை''பீக்' ஹவர்சில் ஜெகதளா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் 'தொல்லை'
'பீக்' ஹவர்சில் ஜெகதளா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் 'தொல்லை'
'பீக்' ஹவர்சில் ஜெகதளா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் 'தொல்லை'
'பீக்' ஹவர்சில் ஜெகதளா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் 'தொல்லை'
ADDED : ஜன 07, 2024 11:19 PM

குன்னுார்:அருவங்காடு - ஜெகதளா சாலையோரத்தில் நிறுத்தும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி உட்பட சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய சாலையாக அருவங்காடு - ஜெகதளா உள்ளது.
இந்த பகுதிகளில் பார்க்கிங் வசதி எதுவும் இல்லாத நிலையில் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகிறது.
சமீபத்தில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதுடன் சாலை சீரமைக்கப்படவில்லை. ஏற்கனவே, ஆக்கிரமிப்புகளால் குறுகிய இந்த சாலையில், வாகனங்களும் நிறுத்தப்படுவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இவ்வழியாக இயக்கப்படும் சில மினி பஸ்களும் சாலையின் நடுவே நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.பீக் ஹவர்ஸ் நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதே போல, பணிக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பால் குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அபராத வசூல் செய்ய போலீசார் பணிக்கு அனுப்பி விடுவதால் கிராம சாலையில் போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஜெகதளா பேரூராட்சி சார்பில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்துவதுடன், போலீசார் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.