/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுார் தவளை மலையில் தொங்கும் பாறைகள் சுற்றுலா வாகனங்களுக்கு தடை; கனிம வளத்துறையினர் ஆய்வு கூடலுார் தவளை மலையில் தொங்கும் பாறைகள் சுற்றுலா வாகனங்களுக்கு தடை; கனிம வளத்துறையினர் ஆய்வு
கூடலுார் தவளை மலையில் தொங்கும் பாறைகள் சுற்றுலா வாகனங்களுக்கு தடை; கனிம வளத்துறையினர் ஆய்வு
கூடலுார் தவளை மலையில் தொங்கும் பாறைகள் சுற்றுலா வாகனங்களுக்கு தடை; கனிம வளத்துறையினர் ஆய்வு
கூடலுார் தவளை மலையில் தொங்கும் பாறைகள் சுற்றுலா வாகனங்களுக்கு தடை; கனிம வளத்துறையினர் ஆய்வு
ADDED : மே 30, 2025 01:03 AM

கூடலுார்:கூடலுார் தவளைமலை பகுதியில் பாறை தொங்கும் இடங்களை கனிமவளத்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்; விடுதிகளுக்கு முன்பதிவு செய்த சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளைமலை அருகே நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் ஆய்வு செய்த அதிகாரிகள், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில், 30 அடி உயரத்தில், இரு இடங்களில் சில பாறைகள் விழும் நிலையில் தொங்குவதாக தெரிவித்தனர்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'மறு உத்தரவு வரும் வரை கனரக வாகனங்கள் இயக்க வேண்டாம்; பகல் நேரத்தில் அரசு பஸ்கள், சிறிய வாகனங்கள் இயக்க அனுமதி; 'ரெட்' அலர்ட் அறிவிப்பால், இந்த வழியாக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதிப்பதில்லை,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, நேற்று கர்நாடகம், கேரளாவில் இருந்து கூடலுார் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தது. ஏற்கனவே, ஊட்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில் முன்பதிவு செய்துள்ள சுற்றுலா வந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாறைகள் தொங்கும் தவளை மலை பகுதியை, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், கனிமவளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் எழில் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'மலையின் மேல் பகுதியில் இரு இடங்களில் பாறைகள் தொங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கனிவளத்துறை தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.