/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம் எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்
எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்
எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்
எருமாடு சிறைச்சால் கிராமத்தில் பழங்குடியினருக்கு குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 03, 2025 11:25 PM

பந்தலுார், ;பந்தலுார் அருகே, எருமாடு சிறைச்சால் பழங்குடியினர் கிராமத்தில் குறைதீர் முகாம் நடந்தது.
வருவாய் ஆய்வாளர் கவுரி வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, தாசில்தார் சிராஜூநிஷா, டி.எஸ்.பி., ஜெயபாலன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர், துறை சார்ந்த தகவல்களை பழங்குடியின மக்களுக்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து, உதவித்தொகை, வீடு, மயானத்திற்கு சாலை, கிணறு, கால்வாய் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. வி.ஏ.ஓ., ராஜேந்திரன் நன்றி கூறினார்.