/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுமி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு சிறுமி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு
சிறுமி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு
சிறுமி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு
சிறுமி கர்ப்பம்: மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு
ADDED : மே 22, 2025 03:00 AM
ஊட்டி,:நீலகிரி மாவட்டம், ஊட்டி புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின், 16 வயது மகள் அங்குள்ள பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கல்லுாரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பெற்றோர் சிறுமியை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில், சிறுமி, 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.