/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம்: கூடலுாரில் கடையடைப்புசிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம்: கூடலுாரில் கடையடைப்பு
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம்: கூடலுாரில் கடையடைப்பு
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம்: கூடலுாரில் கடையடைப்பு
சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம்: கூடலுாரில் கடையடைப்பு
ADDED : ஜன 07, 2024 11:25 PM

கூடலுார்:-பந்தலூரில் சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் நேற்று கடையடைப்பு நடந்தது.
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை தாக்கி வந்த சிறுத்தை, 21ம் தேதி மூன்று பழங்குடி பெண்களை தாக்கியது. அதில் சரிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், 5 இடங்களில் கூண்டு வைத்தனர். 4ம் தேதி சேவியர்மட்டம் என்ற பகுதியில், 4 வயது சிறுமியை தாக்கியதில் சிறுமி காயங்களுடன் உயிர் தப்பினார்.
நேற்று முன்தினம், மாலை மேங்கோரேஞ் பகுதியில், 3 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி பந்தலூர், கூடலூர் பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கூடலூர் வியாபாரிகள் சங்கத்தின் அழைப்பு ஏற்று, நேற்று, கூடலுாரில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.
கூடலூர் வழியாக கேரளா, கர்நாடகாவுக்கு குறைந்த அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில், 21 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.