சூதாட்டம் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்
சூதாட்டம் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்
சூதாட்டம் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்
ADDED : ஜன 03, 2024 11:45 PM
சின்னதடாகம் : சின்னதடாகம் அருகே சூதாடிய, 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
சின்னதடாகம், மாங்கரை கோழி பண்ணை அருகே சூதாட்டம் நடப்பதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ஜனா, முனீஸ், ராம்ராஜ் உள்ளிட்டோர் அதிரடி சோதனை நடத்தியபோது, சூதாடி கொண்டிருந்த 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 4.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.