/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெண்கள் நலனை காக்க இலவச மருத்துவ முகாம் பெண்கள் நலனை காக்க இலவச மருத்துவ முகாம்
பெண்கள் நலனை காக்க இலவச மருத்துவ முகாம்
பெண்கள் நலனை காக்க இலவச மருத்துவ முகாம்
பெண்கள் நலனை காக்க இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 24, 2025 11:42 PM
கோத்தகிரி: கோத்தகிரி கெங்கரை கிராமத்தில், 'நாக்குபெட்டா' பவுண்டேஷன் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நாக்குபெட்டா பவுண்டேஷன் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். காரமடை சவிதா மருத்துவமனை தலைமை மருத்துவர் சசித்ரா தாமோதரன் தலைமை வகித்தார். மருத்துவர்கள் கனிமொழி, சசிகுமார், சங்கீதா, மீனாட்சி பிரியா, சபாட்டினி மற்றும் விஷ்ணு ஆகியோர், குழந்தை நலம், மகப்பேறு மற்றும் மாதவிடாய் உட்பட, பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பிரச்னைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
மேலும், பெண்களுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நேரடி ஆலோசனை வழங்கினர். குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியர், நாக்குபெட்டா பவுண்டேஷன் தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஊர் தலைவர் கணேசன் வரவேற்றார். பவுண்டேஷன் நிறுவனர் சிவலிங்கம் நன்றி கூறினார்.