/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பந்தலுார் ஹட்டி பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலுார் ஹட்டி பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலுார் ஹட்டி பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலுார் ஹட்டி பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்
பந்தலுார் ஹட்டி பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : செப் 19, 2025 08:38 PM

பந்தலுார்; பந்தலுாரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் பயனடைந்தனர்.
பந்தலுார் ஹட்டி பகுதியில், சக்தி நீலகிரி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிர்வாகி சுரேஷ் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் காளிமுத்து முகாமினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 'ஐ பவுண்டேஷன்' கண் பரிசோதனை குழுவினர், கண் பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர்.
அதில், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் முரளி, சதீஷ்,ஜெகன், கலைச்செல்வன், ரவி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.