/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நான்கு மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி; கன்டோன்மென்டில் விருது, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு நான்கு மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி; கன்டோன்மென்டில் விருது, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு
நான்கு மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி; கன்டோன்மென்டில் விருது, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு
நான்கு மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி; கன்டோன்மென்டில் விருது, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு
நான்கு மாதம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணி; கன்டோன்மென்டில் விருது, சான்றிதழ்கள் வழங்கி கவுரவிப்பு
ADDED : ஜூன் 05, 2025 11:55 PM

குன்னுார்; குன்னுார் அருகே, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 4 மாத காலம் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
குன்னுார் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 'உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்,' என்ற கருப்பொருளின் கீழ், உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள், 4 மாத காலம் நடந்தது.
அதில், 'நீர்நிலைகளை அகலப்படுத்துதல், துார் வாருதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள். மரங்கள் நடவு செய்தல்,' என, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் கழிவு மேலாண்மை திட்ட பணிகளில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தலைமை வகித்த வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் பாபாசாகிப் லோட்டே, விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். வாரியத்தில் மேற்கொண்ட துாய்மை பணிகள் குறித்த 'வீடியோ' வெளியிடப்பட்டது.
பொறியாளர் சுரேஷ், நியமன அலுவலர் ஷீபா, முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார், கிளீன் குன்னுார் தலைவர் சமந்தா அயனா, செயலாளர் வசந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வாரிய சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் பூரணி மற்றும் அலுவலர்கள் செய்தனர்.