/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலையில் 40 ஆண்டுகள் தேனீக்கள் வாழ்ந்த இலவமரம் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை முதுமலையில் 40 ஆண்டுகள் தேனீக்கள் வாழ்ந்த இலவமரம் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை
முதுமலையில் 40 ஆண்டுகள் தேனீக்கள் வாழ்ந்த இலவமரம் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை
முதுமலையில் 40 ஆண்டுகள் தேனீக்கள் வாழ்ந்த இலவமரம் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை
முதுமலையில் 40 ஆண்டுகள் தேனீக்கள் வாழ்ந்த இலவமரம் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை
ADDED : மே 15, 2025 10:59 PM

கூடலுார், ; முதுமலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம், 40 ஆண்டுகளாக தேனீக்கள் கூடு கட்டி வந்த, முன் இலவமரம் தேன் கூடுகளோடு சாய்ந்ததால் வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், பாம்பக்ஸ், தெப்பக்காடு அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இரண்டு முள் இலவமரங்களில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் தேனீக்கள் கூடுகளைக் கட்டி, தேன் சேகரித்து, சீசன் முடிந்தபின் கூடுகளை காலி செய்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளது. இதனை, இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
நடப்பு ஆண்டு இந்த இரண்டு மரங்களில் தேனீக்கள் கூடுகள் கட்டி, தேன் சேகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பாம்பாக்ஸ் பகுதியில் உள்ள முள் இலவமரம் தேன் கூடுகளோடு வனப்பகுதியில் சாய்ந்தது. மரத்திலிருந்து தேன் கூடுகள் சேதமடைந்து ஏராளமான தேன் பூச்சிகளும் உயிரிழந்தன. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சீசன் காலங்களின் தேனீக்களில் வாழ்விடமாக இருந்த இந்த மரம் சாய்ந்தது வனத் துறையினரை கவலையடைய செய்துள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலையோரம் ஏராளமான மரங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட இந்த இரண்டு மரங்களில் மட்டுமே, ஆண்டுதோறும் தேனீக்கள் கூடு கட்டி செல்வது வழக்கம். இதில் பாம் பாக்ஸ் பகுதியில் உள்ள மரத்தில், 40 ஆண்டுகளாக தேனீக்கள் கூடி கட்டி வந்தது. இந்த மரம் சாய்ந்தது, தேனீக்களுக்கும், வனத்துக்கும் இழப்பாகும்' என்றனர்.