/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சாலையோரம் உலா வரும் யானை கூட்டம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கைசாலையோரம் உலா வரும் யானை கூட்டம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் யானை கூட்டம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் யானை கூட்டம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையோரம் உலா வரும் யானை கூட்டம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 05, 2024 11:39 PM

கூடலுார்;கூடலுார் குடோன் -நாடுகாணி இடைப்பட்ட கோழிக்கோடு சாலையோர வனத்தில், குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல எச்சரித்துள்ளனர்.
கூடலுார் கோழிக்கொடு சாலை, குடோன் - நாடுகாணி இடைப்பட்ட இரண்டு கி.மீ., துாரத்தில் ஒரு புறம் ஜீன்பூல் தாவரம் மையத்தில் புல்வெளிகளும்; மற்றொரு பகுதி நீரோடையுடன் கூடிய பசுமை வனப்பகுதியும் உள்ளது. அதனை ஒட்டி அரசு தேயிலை தோட்டம் (டான்டீ) அமைந்துள்ளது.
தற்போது, இப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன், 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவைகள், உணவு தண்ணீருக்காக, அடிக்கடி கோழிக்கோடு சாலையில் கடந்து செல்கிறது.
'அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால், தாக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் ஓட்டுனர்களும், சுற்றுலா பயணிகளும் கவனமாக செல்ல வேண்டும்,' என, எச்சரித்துள்ளனர்.
டான்டீ தொழிலாளர் கூறுகையில், 'இப்பகுதியில் முகாமிடம் காட்டிய அணைகள் இரவில் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு வந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதால் யானைகள் அடிக்கடி விசிட் செய்து, செல்வது வழக்கம். தற்போது இங்கு முகாமிட்டுள்ள யானைகளை, சுழற்சி முறையில் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்தால், இடையூறு ஏற்படுத்தாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதனை விரட்டுவார்கள்,' என்றனர்.