யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு
யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு
யானைகளை தடுக்க தீ மூட்டி கண்காணிப்பு
ADDED : பிப் 10, 2024 08:00 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை பகுதியில், கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் கோடைக்கு முன்பாகவே, வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.
வன ஊழியர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.
இதனால் வன ஊழியர்கள் இரவில், குடியிருப்பை ஒட்டிய வன எல்லைகளில், யானைகள் ஊருக்குள் வரும் பாதைகளை அடையாளம் கண்டு, அங்கு தீ மூட்டி யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட, புது யுக்தியை கையாண்டுள்ளனர்.
அதன்படி, கூடலுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட அல்லுார்வயல், ஏழுமுறம், கோடமூலா, மாக்கமூலா, செலுக்காடி, கோல்கேட் குடியிருப்பை ஒட்டிய வன எல்லைகளில், இரவில் தீ மூட்டி யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.