/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: 12 டன் 'பிளாஸ்டிக்' எரிந்து சேதம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: 12 டன் 'பிளாஸ்டிக்' எரிந்து சேதம்
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: 12 டன் 'பிளாஸ்டிக்' எரிந்து சேதம்
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: 12 டன் 'பிளாஸ்டிக்' எரிந்து சேதம்
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: 12 டன் 'பிளாஸ்டிக்' எரிந்து சேதம்
ADDED : ஜூன் 15, 2025 09:38 PM

கூடலுார்; கூடலுார் நகராட்சி குப்பை கிடங்கில், மின் கசிவால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.
கூடலுார் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சில்வர் கிளவுட் பகுதியில், குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளில், 'மட்கும், மட்காத குப்பை,'என, தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதில், மட்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை, தனியாக பிரித்து அதனை, தனியார் 'சிமென்ட்' நிறுவனங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
குப்பை கிடங்கில் திடீர் தீ
இந்நிலையில், குப்பை கிடங்கில் உள்ள குடோனில், தனியார் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக, 12 டன் பிளாஸ்டிக் கழிவகள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு குப்பை கிடங்குக்கு ஊழியர்கள் சென்ற போது, பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த கிடங்களில் தீ ஏற்பட்டு, கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று, நகராட்சி லாரியில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்
தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்து, பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால், அங்கு வைக்கப்பட்டிருந்த, 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பேலிங் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. தீயினால் ஏற்பட்ட புகையினால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு கூறுகையில், ''நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும், மட்காத பிளாஸ்டிக் கழிவுகள் இங்குள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் மின் கசிவு ஏற்பட்டு, தீயில் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. ஆய்வுக்கு பின், நஷ்டம் குறித்து விவரம் தெரிய வரும்,'' என்றார்.