/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரசாயன பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளம்; மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ரசாயன பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளம்; மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ரசாயன பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளம்; மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ரசாயன பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளம்; மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ரசாயன பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளம்; மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 18, 2025 08:56 PM

ஊட்டி; ரசாயன உரங்களின் பயன்பாட்டால் சீரழிந்துள்ள மண்வளத்தை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஊட்டியில் கருத்தரங்கு நடந்தது.
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உணவுப் பொருட்கள் தேவையை அதிகரிக்க, பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டு ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்தது.
இதனால், 'மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும்,' என்பன, போன்ற காரணங்கள் கூறப்பட்டன. ரசாயன உரங்களால் விவசாய உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 'கிசான் சங்கோஷ்டி' எனப்படும் விவசாயிகள் கருத்தரங்கு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் தோட்டக்கலை அரங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கு நடந்தது. மத்திய அரசின் மெட்ராஸ் உர நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் தோட்டகலைத்துறை இணை இயக்குனர் சிபிலாமேரி, விஞ்ஞானி வினோத், மெட்ராஸ் உர நிறுவன மண்டல மேலாளர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டு ரசாயன உரங்கள் பயன்பாட்டால் மண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினர்.
மேலும், விளைவிக்கும் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, இயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். கருத்தரங்கில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.